×

கோவை விழாவையொட்டி பழங்கால கார் கண்காட்சி

 

கோவை, ஜன.6: கோவை விழாவையொட்டி பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. இதனை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவையின் பல்வேறு சிறப்புகளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு கோவை விழாவையொட்டி கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் பழங்கால கார் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கண்காட்சியில் கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தினர். கண்காட்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் இடம்பெற்றன. சாலை விதிகளை பின்பற்றுவதை விழிப்புணர்வாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது. ஓல்ட் கிளாசிக் மற்றும் மாடர்ன் எக்ஸோடிக்ஸ் உள்ளிட்ட 40 கார்கள் கோவையின் முக்கிய சாலைகள் மற்றும் இடங்கள் வழியாக சென்றது.

சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1980ம் ஆண்டு வரையுள்ள பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. பழைய மாடல் பென்ஸ், ரோஸ் ரோல்ஸ், லேண்ட் குரூசர், செவர்லே, போர்டு, பத்மினி, அம்பாசிடர், வோக்ஸ்வேகன் கார்கள், பழைய ஜீப் உள்ளிட்டவை இடம்பெற்றன. கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பழங்கால கார்கள் மற்றும் பைக்குகளை குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

The post கோவை விழாவையொட்டி பழங்கால கார் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Car ,Coimbatore Festival ,Coimbatore ,Police Commissioner ,Balakrishnan ,Coimbatore Classic Car Exhibition ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...